Friday 30 December 2016

மார்கழி மாதப் பழமொழிகள்



'மார்கழி மாதம் மச்சும் குளிரும்', 'மார்கழி குளிர் மாசி வரை இருக்கும்' போன்ற பழமொழிகள் மார்கழி மாத பருவ நிலையை உணர்த்துகின்றன.'மார்கழி பிறந்தால் மழையும் இல்லை,

பாரதத்திற்கு பிறகு படையும் இல்லை' என்ற பழமொழி, மகாபாரதப் போரில் பங்குபெற்ற

படைகளின் சிறப்பை விளக்குகிறது. 'மார்கழி வெற்றிலையை மாடு கூட தின்னாது' என்னும் பழமொழி மார்கழி மாதம் பனியால் வெற்றிலை சுவை இழப்பதைக் காட்டுகிறது. 'போர்த்திக் கொண்டவர்களை காத்துக் கொண்டு இருக்குமாம் போக்கிடம் இல்லாத குளிரு' என்னும் பழமொழி, மார்கழி மாதத்தில் போர்த்த, போர்த்த குளிரும் என்பதையும் போர்த்துவதை விட்டால், குளிரும் போய்விடும் என்பதைக் காட்டுகிறது

No comments:

Post a Comment