Tuesday 3 January 2017

நாயுருவி வசியம்
     செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வசிகரமாகும் பின் அனைத்து வேர்களையும் எடுத்து சுட்டு கரியாக்கி அதை திலகமாக இட்டால் வசியம் உண்டகும் மேலும் இப்படி செய்தால் உடலில் அதிக உஷ்ணம் ஆகும் அதை தவிர்க்க பசும் பால் அருந்த வேண்டும். காப்பி, டீ, புகை, புலால் கூடாது.இது முக்கியம்
சுளுக்கு நீங்க மந்திரம்


" ஒம் சங்கு உருள, சக்கரம் உருள, சூலம்உருள, உரல்உருள, சமுத்திரம் ஏழும் உருண்டோடிப் போக சுவாகா"
                                           
                        - என்று சுளுக்கு உள்ள இடத்தில் இரும்பு ஆயுதத்தால் 108 - உரு செபித்து மந்திரிக்கவும். இதனால் சுளுக்கு நிவர்த்தியாகும்.
நாயுருவி வேர் கொண்டு வந்து 'பிரஷ்' போல் தட்டி பல் துலக்க வேண்டும். இவ்விதம் சில நாட்கள் துலக்கி வந்தால் பல்வலி,  பல் ஆட்டம்,  சொத்தைப்பல் இவை நீங்கும்.  பல் வெண்மையாகவும்,  கெட்டியாகவும்,  ஈறுகளுக்கு அதிக வெண்மையும் தரும்.
நாள் விழிப்பு

1) புதன்-வியாழன்-வெள்ளி = இரு கண்ணுள்ள நாட்கள்

2) ஞாயிறு- திங்கள் = ஒரு கண்ணுள்ள நாட்கள்
...
3) செவ்வாய் - சனி = குருட்டு நாட்கள்

மேற்குரிய நாட்களில்

இருகண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் நன்மையாகும்,

ஒரு கண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் மத்திம பலன் உண்டாகும்.

 குருட்டு நாட்களில் காரியங்கள் செய்யின் துன்பம் உண்டகும்,எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.

Monday 2 January 2017

யார் ஒன்பது கல் மோதிரம் அணியலாம்?
புராணங்களில் ஒரு கதை உண்டு.  கிருஷ்ணர் விலை மதிக்க முடியாத சமந்தக மணியை தேடி போனதாகவும், அதற்காக பெரும் யுத்தம் கூட நடந்ததாகவும் புராணங்கள்  சொல்கிறது.

அது யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தரித்திரம் என்பதே இருக்காதாம். மகாலக்ஷ்மியே அவர்களிடம் வாசம் செய்வாளாம். செல்வம் ஓடி வரும், வெற்றி தேடி வரும், வீரம் நாடிவரும்.

இது தெய்வங்களுக்கு உரியது.  தேவர்களுக்கு உரியது. மனிதர்களுக்கு கிடைக்க போவதில்லை.

நாக ரத்தினம் என்றொரு ரத்தினம் உண்டு. வாலிபம் கடந்து வயோதிகம் அடைந்த நல்ல பாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷ பையில்  இருந்து தன் விஷத்தை  இழக்காமல் இருந்தால், அந்த விஷமானது நாகரெத்தினமாக மாறும் என்று சொல்லபடுகிறது.

ஆனால் இதுவரை நாகரெத்தினத்தை பார்த்தவர்களும் இல்லை.  வைத்திருப்பவர்களும் இல்லை. ஆனாலும் மற்ற நவரத்தினங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.

வைரம் வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும்.  எதிர் மறை எண்ணக்களை போக்கும்.   அதிஷ்டத்தை அழைத்து வரும். மனம் தெளிவாகும். நடக்குமா. நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா, முடியுமா, முடியாதா என்பது போன்ற எதிர் மறை எண்ணங்கள் எதுவும் வராது.
மாணிக்கம் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்று தருகிறது.  ரெத்த ஓட்டத்தை சீராக வைத்து இருக்கிறது.
மரகதம் அணிந்தால் அறிவை பிரகாசிக்க செய்யும்.  ஞாபக சத்தி அதிகரிக்கும்.  மறதி குணம்,  மந்த புத்தியை போக்கும்.  நரம்பு தொடர்பான வியாதிகளை நீக்கும்.
புஷ்பராகம் கண்பார்வையை சரி செய்யும். திடீர் அதிச்டங்களை அழைத்து வரும்.
வைடுரியம் எதிர் மறை எண்ணத்தை போக்கும். பில்லி சூன்யம் ஏவல் செய்வினை கோளாறுகள் வராமல் பாதுகாக்கும். எதிரிகளை எதிர்ப்புகளை  முறியடிக்கும்.
பவழம் வீரத்தை தரும். தேக்கு மரதேகம், தினவெடுத்த தோள்கள், ஆஷானுபாகுவான உடம்பு, என்று சொல்வது மாதிரி கட்டு மஸ்தான உடலை தருகிறது.
முத்து உடல் குளிர்ச்சியை தரும். மனம் தெளிவாகும்.
நீலக்கல் கிரக தோஷத்தை போக்கும்.
கோமேதகம் உடல் வெப்பம் சீராக இருக்க காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு ரெத்தினமும் ஒவ்வொரு பலன்களை தந்தாலும், அனைத்தையும்  ஒருவர் அணிந்தது கொள்ள முடியாது.

அப்படி அணிந்து கொள்ள வேண்டுமானால் செவ்வாய் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.  ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கலாம். உச்சம் பெற்று இருக்கலாம். அல்லது மேஷ ராசியில். விருச்சிக ராசியில் இருந்தால். அல்லது பிறந்தால் மட்டுமே ஒன்பது கல் மோதிரம் அணிய முடியும்.

Friday 30 December 2016

பாம்புகளை சாகடிக்க
வேண்டாமென முன்னோர்கள்
சொன்ன காரணம்.
நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே
பார்க்கிறோம். ஆனால் நமது பண்டைய
கால ஞானிகள் பாம்பு வடிவத்தை
மூலாதார சக்கரத்தில் உறங்கி
கொண்டிருக்கும் குண்டலினி
சக்தியாகவும் அமானுஸ்யம்
நிறைந்ததாகவும் கண்டார்கள் .
புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி
விட்டால் சீறிக் கொண்டு எப்படி
கிளம்புமோ அதே போலவே யோக
பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி
தண்டுவடத்தை பற்றிக் கொண்டு
சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி
எழும்பும் என்று சொன்னார்கள்.
இதனால் தான் கடவுள்களின்
உருவத்தோடு நாகத்தை
சம்பந்தப்படுத்தினார்கள்.
பரந்தாமனின் பாம்பு படுக்கை
பரமசிவனின் பாம்மனி எல்லாமே
குண்டலினி தத்துவத்தை விளக்க
எழுந்ததே யாகும்
இனி நாக வழிபாடு நம் நாட்டில்
எப்போது இருந்து
கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை
சற்று ஆராய்வோம்.
இந்திய துணைக்கண்டம் முழுவதுமே
ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு,
இருந்து வருகிறது.
சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம்
போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த
காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை
கொண்டு இந்திய துணைக் கண்டம்
முழுவதுமே நாக வழிபாடு
விரிவடைந்தன என சொல்லலாம்.
திருமாலும் சிவபெருமானும்
மட்டுமே நாகங்களை துணையாக
கொள்ளவில்லை. பல புத்தர் சிலைகளை
பார்க்கும் போதும் மகாவீரரின் சில
தோற்ற கோலங்களை காணும் போதும்
ஐந்து தலை நாகம் அவர்களுக்கு
குடைபிடித்து இருப்பது
தெரிகிறது.
சிந்து சமவெளி நாகரிக காலத்திலும்
அதற்கு முன்னரும் கூட நாகங்களை
மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும்.
ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு
முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய
நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை
வைத்து நாம் இந்த முடிவுக்கு
வரலாம்.
வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை
பற்றி விரிவான குறிப்புகள்
வருகின்றன.
வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற
பெயரில் அழைத்திருக்கிறார்கள். ரிக்,
சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக
பாம்புகள் சொல்லப்படவில்லை.
ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ
நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது
யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில்
தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பழங்கால பாஞ்சல தேசத்திடில்
தலைநகரம் அஹீ சத்திரமாகும். அதாவது
இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று
சொல்லலாம்.
இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய
அக்னிமித்திரன், பானு மித்திரன்
ஆகியோர்களின் காலத்து நாணயங்களில்
பாம்பு முத்திரை
பொறிக்கபட்டுள்ளது.
அதர்வண வேதத்தின் சில பகுதிகளில்
பாம்புகளை தாந்திரிக நெறிக்கு
பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன
நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும்
பௌத்த நூலும் பேசுகிறது. அதில்
சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ
என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை
பற்றி விளக்கங்கள்
சொல்லப்பட்டிருக்கின்றன.
குஷான மன்னர்களின் காலத்தில் இந்த
நாக வடிவம் சிலை வடிவாக
உருவாகியிருக்கலாம் என
நம்பப்படுகிறது.
மதுராவில் உள்ள அருங்காட்சியகம்
ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி
வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும்
இருக்கிறது.
கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட
நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின்
ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும்
புதையல்களை மர்மமான முறையில்
பாதுகாக்கப்படுகின்றன என்றும்
நம்பிக்கை ஏற்பட்டது.
பாம்புகளை பொறுத்த வரை எல்லா
மதத்தினரும் அறிவு பூர்வமாகவும்,
மூடத்தனமாகவும் நம்பினர் என்றே
சொல்ல வேண்டும்.
பண்டைய கால சிற்பங்களும்,
ஓவியங்களும், நாகர்களும், நாக
கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.
இவர்கள் பாதி மனித உருவம், பாதி
பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.
பாலித்தீவில் நாக கன்னிகை மழை
கடவுளான வருண தேவனின்
பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.
மலாய்காரர்களின் கிரீஸ் {KERIS} என்று
சொல்லப்படும் ஆயுதம் கூட பாம்பின்
வடிவில் இருப்பதை பார்த்திருக்கலாம்
ஜோதிட சாஸ்திரத்தில் காணப்படும்
சர்ப்பக் கிரகங்களாகிய இராகு
கேதுக்களை வைத்து நம் பரம்பரையில்
நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம
வினை சாரங்களை கண்டரிய முடியும்
என்று கூறுகின்றார்கள்.
இதையே சீனர்கள் {DRAGON} கடல்
நாகங்களாக வழிப்படுகின்றார்கள்
மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில்
நாகத்தை வழிபடுவதன் மூலம்
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில்
ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை
பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனாலேயே பிற்காலத்தில் உருவான
வராக சிற்பத்தில் காலுக்கடியில்
பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை
முறையை விவரிக்கும் சங்க
இலக்கியங்களில் நாக வழிபாடு
சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.
பொதுவாக பாம்புகளை வழிபடுவது
இந்து மதத்தில் உள்ள யோக சார
மார்க்கத்தின் வழிபாட்டு
முறையேயாகும்.
ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து
இன்று கிராம தேவதைகளின்
பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து
விட்டன.
இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின்
ஆன்மா பாம்பு வடிவத்தில்
உலாவுவதாக உள்ள நம்பிக்கையே
ஆகும்
நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக
சாகடிக்க கூடாது என்று சொல்வதில்
பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு
சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற
கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும்
மனித ஆத்மாவானது மனித சரீரத்தை
தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின்
உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம்
என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள்
சொல்கின்றன
இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும்
இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை
தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம்
நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை
சாகடித்தால் அவர்களின் தவத்தைக்
கலைத்த பாவத்திற்கு ஆளாவோம்
எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க
வேண்டாமென முன்னோர்கள்
சொன்னார்கள்
அ என்றால் சூரியன், உ என்றால் இந்திரன், ம் என்றால் அக்னி. எனவே ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுய வடிவு. ஓம் என்ற காந்த ஒலி அதிர்வு மின் அலைகளுடன் தொடர்புடையது. ஒரு தொடர் சுழற்சியிலிருந்து ஓம் என்ற ஒலியை கேட்கலாம். பூமி மற்றும் அண்டங்களின் சுழற்சியால் பிரபஞ்சத்தில் காந்த அலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் ஒளியின் அசைவுகளால் மின் அலைகள் பரவுகின்றன. இந்த அலைகள் நம் உடலிலும் பிரபஞ்ச பொருள்களிலும் பதிந்து மின்காந்த சக்தியைத் தோற்றுவிக்கின்றன. உயிர்களுக்குத் தேவையான ஆதாரப் பொருள்களும் அடிப்படைச் செயல்களுக்குரிய திரவங்களும் தாதுக்களும் இந்த சக்திகளால் உண்டாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் இயக்கங்கள் நடைபெறுகின்றது. ஓங்காரத்தின் ஒளி முதலிய நிறம், சக்தியாவும் நம் மவுன முயற்சியால் மிகப் பெரிய பலன்கள் அந்த உயிரின் உடலுக்கு கிடைக்கச் செய்கின்றது. நாபியில் ‘அ’ எனத் தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ என முடியும் ஓம் என்ற அந்த ஓசையுடன் காலம், இடம், காரணம், காரியம் எல்லாம் நம் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

காலத்தை- விநாடி, நிமிஷம், மணி, நாள், மாதம், ஆண்டு ஆகிய உருவ அளவைகளால் உணரலாம்.

இடத்தை- தொடங்கும் இடத்தின் எல்லை, முடியும் இடத்தின் எல்லைக்குட்பட்ட நீட்டல் அளவை முதலிய உருவ அளவைகளால் உணரலாம்.

காரணம், காரியம்- ஓர் சிறிய ஆலம் விதையில் பெரிய ஆலமரம் உண்டாகிறது என்ற காரண காரியத்தை புரியலாம்.

ஓம் என்ற உருவமான ஓர் ஓசை சக்தியின் வளர்ச்சியை இயக்கத்தை காலம், இடம், காரண காரியம் ஆகிய அடையாளங்களால் உடம்பினுள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் உருவாக்க முடியும்.

பிரபஞ்சத்தின் (அண்டம்) சிறிய பகுதி உடல் (பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம். நாதம் என்பது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆகாயத்தின் அடிப்படை ஒலித் தத்துவமாகும். பிரபஞ்சத்தின் எல்லா நாத ஓசைகளும் தன்னிலிருந்து சில பொருட்களை உண்டாக்கும். குரலின் இனிய ஓசை, காற்றின் ஓசை, நெருப்பின் எரியும் ஓசை, மண்ணின் சரியும் ஓசை, நீரின் பாயும் ஓசை மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு ஓசை எடுத்துச் செல்வது போன்றவைகள் எல்லாம் நாதத்தின் வகைகளாகும். செயற்கை கருவிகளால் உண்டாகும் செயற்கை ஓசைகள் ஏற்றத்தாழ்வு கொண்டிருந்தாலும் நாத அளவில் அது இயற்கையானது. இந்த இயற்கையான நாதங்களை ஒருங்கிணைத்து தோன்றுவிப்பதே ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி மந்திரமாகும். இந்த நாதத்தை நாபியின் (தொப்புள்) பகுதியில் எழுப்பும்போது உடலில் உள்ள வேதியல் பொருள்களில் பலவித வடிவம், நிறம், ஒளி, சக்தி, அலை ஆகியன உண்டாகும்...